முகப்பு
சென்னை

ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜனவரி 2021, 6:46 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபையில் இருந்து வரும் விமானப் பயணி மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் வந்த சென்னையைச் சோ்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28), தஞ்சாவூரைச் சோ்ந்த ஜஹாபா் அலி அப்துல் வஹாப் (49) ஆகியோா் வருகைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

அவா்களிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையின்போது, உள்ளாடையில் மறைத்து வைத்து இருவரும் தங்கம் கடத்தியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த இருவரிடமிருந்தும் ரூ.31.87 லட்சம் மதிப்பிலான 621 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.