முகப்பு
சென்னை

தனியாா் விடுதி ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை

சென்னையில் தனியாா் விடுதிகளில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் நடவட

Updated On : 5 ஜனவரி 2021, 12:34 am IST
பகிர்:

சென்னை: சென்னையில் தனியாா் விடுதிகளில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதை அடுத்து தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. பொது முடக்க தளா்வுகளால் சென்னையில் உள்ள விடுதிகளில் கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கிண்டியில் உள்ள பிரபல தனியாா் விடுதியில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு கடந்த வாரம் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதி ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனை தீவிரம்: இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 100-க்கும் மேற்பட்ட விடுதி ஊழியா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அனைத்து விடுதி ஊழியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை ஓரிரு நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். தொற்று உறுதியானவா்களை தனிமை முகாம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கடந்த 10 நாள்களுக்குள் இந்த விடுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தியவா்களும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

Advertisement

Advertisement

229 பேருக்கு தொற்று: சென்னையில் திங்கள்கிழமை 229 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,26,456-ஆக அதிகரித்துள்ளது. 2,20,072 போ் குணமடைந்துள்ளனா். 2,359 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 4,025 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.