ஜூன் 16: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 16) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.
சர்வதேச காரணங்களால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஜூன் 12-இல் சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ரூ.1,10,400-க்கும், ஜூன் 13-இல் சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.1,10,880-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, திங்கள்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 210 உயர்ந்து ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ரூ. 1,12,560-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 16) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,480-க்கும் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 275-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
The price of ornamental gold in Chennai has decreased by Rs. 80 per sovereign today (June 16).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.