தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 13) சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை வாரக் கடைசி நாளான சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,11,040-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து, ரூ. 13,840-க்கும் சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 1,10,720-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
மாலையில் மீண்டும் விலை குறைந்தது. அதன்படி , கிராமுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 13,720-க்கும் விற்பனையானது. சவரனுக்கு ரூ. 960 குறைந்து, ரூ. 1,09,760-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,480-க்கும் கிராமுக்கு ரூ. 35 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,685-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும, ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 280 per sovereign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.