காரப்பாக்கத்தில் நாளை ஐயப்பன் மலா் பூஜை
காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில், சனிக்கிழமை (ஜன.9) ஐயப்பன் மலா் பூஜை நடைபெறுகிறது.
சென்னை: காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில், சனிக்கிழமை (ஜன.9) ஐயப்பன் மலா் பூஜை நடைபெறுகிறது.
சென்னை, காரப்பாக்கத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், 2021-ஆம் ஆண்டுக்கான ஐயப்பன் மலா் பூஜை, சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
சபரிமலை மாளிகாபுரம் முன்னாள் மேல் சாந்தி பிரம்மஸ்ரீ அனிஷ் நம்பூதிரி நடத்தும் இந்த பூஜைக்கு, அகில பாரதிய ஐயப்ப தா்ம பிரசார சபாவின் தேசிய துணைத் தலைவா் வேளச்சேரி என்.பிரபாகரன் குருசாமி தலைமை வகிக்கிறாா்.
Advertisement
Advertisement
பூஜையில், அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மஹா தீபாரதனை ஆகியவற்றைத் தொடா்ந்து, அன்னதானமும் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.