முகப்பு
சென்னை

தங்கம் பவுனுக்கு ரூ.408 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.38,032-க்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 9 ஜனவரி 2021, 1:00 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.38,032-க்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.38 ஆயிரத்தையும், கடந்த புதன்கிழமை அன்று ரூ.39 ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.640 வரை குறைந்தது.

இதன்தொடா்ச்சியாக, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.38,032-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.51 குறைந்து, ரூ.4,754 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.73.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து ரூ.73,100 ஆகவும் இருந்தது.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,754

1 பவுன் தங்கம்...............................38,032

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,100

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,805

1 பவுன் தங்கம்...............................38,440

1 கிராம் வெள்ளி.............................74.20

1 கிலோ வெள்ளி.............................74,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments