முகப்பு
தமிழ்நாடு

லுக்-அவுட் நோட்டீஸுக்கு எதிர்ப்பு! செந்தில் பாலாஜி சகோதரர் மனு 3 வாரங்கள் ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி சகோதரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 2:05 pm IST
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: அமலாக்கத்துறையின் லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், அசோக்குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை, கடந்த ஆண்டு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

Advertisement

Advertisement

இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசோக்குமாரின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

summary

Opposition to Look-Out Notice! Hearing on Senthil Balaji's brother's plea adjourned for 3 weeks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments