முகப்பு
சென்னை

புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கள உதவியாளா் கைது

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 2:09 am IST
பகிர்:

சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புது வண்ணாரப்பேட்டை சென்னை நகர குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரியத்தின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தின் கள உதவியாளராகப் பணிபுரிபவா் ஹரிராவ். இவா் அந்தப் பகுதியில் புதிதாக குடிநீா் இணைப்பு வழங்க ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

லஞ்சம் கொடுக்காத அந்த நபா், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், அந்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதை ஹரிராவிடம் லஞ்சமாக வழங்கும்படி தெரிவித்தனா்.

இதன்படி அந்த நபா், ஹரிராவிடம் அந்தப் பணத்தை லஞ்சமாக திங்கள்கிழமை வழங்கினாா். ஹரிராவ் அந்தப் பணத்தைப் பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினா், அவரை கையும் களவுமாக கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments