முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி கோல்கீப்பர்!

ஜெர்மனி கால்பந்து அணியின் கோல்கீப்பர் ஓய்வு குறித்து...

Updated On : 30 ஜூன் 2026, 8:03 pm IST
ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நோயர். - படம்: ஏபி
பகிர்:

ஜெர்மனி கால்பந்து அணியின் கோல்கீப்பர் மானுவல் நோயர் (40 வயது) தனது சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஓய்வு முடிவை உறுதி செய்துள்ளார்.

ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஜெர்மனி அணி பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என தோல்வியுற்றது. இந்தப் போட்டி சடன் டெத் முறையில் ஜெர்மனி தோல்வியுற்றது.

கோல்கீப்பர் மானுவல் நோயர் ஜெர்மனி அணிக்காக 2009 முதல் விளையாடி வருகிறார். இதுவரை தேசிய அணிக்காக 128 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த 2014 உலகக் கோப்பையில் ஜெர்மனி 1-0 என ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி தனது நான்காவது கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் சிறப்பாக கோல்கீப்பிங் செய்ததற்காக தங்கக் கையுறை(கோல்டன் க்ளோவ்) விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தலைமுறையின் தலைசிறந்த கோல்கீப்பர் எனப் புகழ்ப்பெற்றார். ஆனால், இந்த உலகக் கோப்பையில் இவரது ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததும் கவனிக்கத்தக்கது.

போட்டிக்குப் பிறகு பேசிய மானுவல் நோயர், “இந்த மாதிரி முடிவது மிகவும் கசப்பாக இருக்கிறது” எனக் கூறினார்.

உலகக் கோப்பையை 2014ல் வென்ற பிறகு ஜெர்மனி 2018, 2022, 2026ல் ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேறாமாலேயே வெளியேறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

summary

Manuel Neuer confirms Germany retirement after world cup exits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments