பிரான்ஸ் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற லெஜெண்டரி வீரர்!
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்ற ஜினடின் ஜிடான் குறித்து...
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அதே நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரும் லெஜெண்டரி வீரருமாகக் கருதப்படும் ஜினடின் ஜிடான் (54 வயது) பதவியேற்றார்.
முன்னதாக பயிற்சியாளராக இருந்த திதியர் தேஷாம்ப் மாற்றப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வெல்லுமென பலரும் எதிர்பார்த்த வேளையில் பிரான்ஸ் அணி நான்காம் இடம் பிடித்து அதிர்ச்சி அளித்தது.
திதியர் தேஷாம்ப் பிரான்ஸ் அணிக்கு 2012–2026 வரை பயிற்சியாளராக இருந்தார். இவரது தலைமையில் பிரான்ஸ் அணி 2018ல் உலகக் கோப்பையும் 2021ல் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பையும் வென்றது.
Advertisement
Advertisement
கடந்த 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பிரான்ஸ் 2026ல் அரையிறுதியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியுற்றது.
தற்போது, இவரது பதவிக்காலம் முடிந்ததும் லெஜண்டரி வீரர் ஜிடான் பக்கம் பிரான்ஸ் திரும்பியுள்ளது. ஜிடான் அடுத்த நான்காண்டுகள் பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
France hires former soccer great Zinedine Zidane as men's national team coach
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.