FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேர்களை மறக்கக் கூடாது..! பேலந்தோர் விருதை ஆப்பிரிக்க மக்களுக்கு சமர்ப்பிக்க விரும்பும் எம்பாபே!

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிளியன் எம்பாபே அளித்த பேட்டி குறித்து...

23 செப்டம்பர் 2026, 3:37 pm IST
கிளியன் எம்பாபே - படம்: ஏபி
பகிர்:

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாபே (27 வயது) நேர்காணல் ஒன்றில், “நாம் நமது வேர்களை மறக்கக் கூடாது; பேலந்தோர் விருதை வென்று அதனை ஆப்பிரிக்க மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தாயிக்கும் பிறந்தவர் கிலியன் எம்பாபே. இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். அந்த நாட்டின் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார்.

ஸ்பெயினில் இருக்கும் பிரபலமான ரியல் மாட்ரிட் கிளப்பில் விளையாடி வருகிறார். உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோல்வியுற்றது.

Advertisement

Advertisement

கால்பந்து உலகில் வழங்கப்படும் மிகவும் மதிப்பு மிக்க விருதாக பேலந்தோர் விருது இருக்கிறது. இந்தப் போட்டியில் எம்பாபேவும் இருக்கிறார். இந்த விருது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் பிரான்ஸில் பிறந்திருந்தாலும் ஆப்பிரிக்க கலாச்சாரத்திலேயே எப்போதும் வளர்க்கப்பட்டுள்ளேன். நான் எனது வேர்களையோ பூர்வீகத்தையோ எப்போதும் வெட்டி எரிய நினைக்கவில்லை; இது எனக்குள் புகுத்தப்பட்ட மதிப்புகளின் ஒரு பகுதியாக இருக்கிறது.

கேமரூனுக்கு சென்று நீண்ட நாள்கள் ஆகவில்லை. நான் சிறிய வயதில் அங்கு செல்லும்போதெல்லாம் எனக்கு அற்புதமாக இருக்கும். ஆப்பிரிக்கா செல்லும் ஒவ்வொரு முறையும் எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும். மக்களின் அன்பை என்னால் உணர முடியும்.

பிரான்ஸில் பிறந்து, எல்லாமே செய்திருக்கிறேன். என்னிடம் கேமரூனியன் மற்றும் அல்ஜீரியனுக்காக பூர்விகம் இருக்கிறது. ஆனாலும் நான் பிரான்ஸ் கலாசாரத்துடன் வளர்ந்துள்ளேன்.

ஆப்பிரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேலந்தோர் விருதை வென்று அவர்களுக்கு எதாவது ஒரு வகையில் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

summary

Kylian Mbappe says he wants to dedicate the Ballon d’Or award to Africa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments