பேலந்தோர் விருதை வென்ற ஹாரி கேன்..! கால் நூற்றாண்டுக்குப் பிறகு முதல் இங்கிலாந்து வீரர்!
இங்கிலாந்து அணியின் கால்பந்து வீரர் ஹாரி கேன் பேலந்தோர் விருது வென்றது குறித்து...
இங்கிலாந்து அணியின் கால்பந்து வீரர் ஹாரி கேன் பேலந்தோர் விருதை முதன்முதலாக வென்று சாதனை படைத்துள்ளார். மெஸ்ஸிக்கு கிடைக்குமென எதிர்பார்த்த இந்த விருது ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கால் நூற்றாண்டுக்குப் பிறகு (25 ஆண்டுகளில்) முதல்முறையாக ஒரு இங்கிலாந்து வீரர் பேலந்தோர் விருதினை வாங்கியுள்ளார். கடைசியாக 2001ல் வைக்கேல் ஓவன் இந்த விருதினை வென்றுள்ளார்.
கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதான பேலந்தோர் விருதுகள் இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டன. இதில் பயர்ன் மியூனிக் க்ளப்பில் விளையாடும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாரி கேன் விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
Advertisement
Advertisement
33 வயதாகும் ஹாரி கேன் கடந்த சீசனில் பயர்ன் மியூனிக் அணிக்காக 73 கோல்கள், 8 அசிஸ்ட் உடன் 81 கோல் பங்களிப்பு செய்து அசத்தினார். அந்த அணி கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக்கைத் தவிர மற்ற மூன்று கோப்பைகளையும் வென்றது.
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியிலிருந்து பயர்ன் மியூனிக் அணிக்கு மாறியதில் இருந்து ஹாரி கேனுக்கு அதிகமான நல்ல விஷயங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பேலந்தோர் விருதுகள் டாப் 5 வீரர்கள்
1. ஹாரி கேன்
2. கிலியன் எம்பாபே
3. லமின் யமால்
4. ரோட்ரி
5. லியோனல் மெஸ்ஸி
Harry Kane becomes first Englishman in 25 years to win Ballon d'Or, Putellas wins her third
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.