ஹாட்ரிக் பேலந்தோர் விருது வென்ற அலெக்ஸியா புட்டெல்லாஸ்..! பொன்மட்டி சாதனை சமன்!
ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை அலெக்ஸியா புட்டெல்லாஸ் ஹாட்ரிக் பேலந்தோர் விருது வென்றது குறித்து...
ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீராங்கனையும் பார்சிலோனா க்ளப்பிற்காக விளையாடியவருமான அலெக்ஸியா புட்டெல்லாஸ் மூன்றாவது முறையாக பேலந்தோர் விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் பிரிவில் இங்கிலாந்தின் ஹாரி கேன் இந்த விருதை முதன்முதலாக வென்றுள்ளார். மெஸ்ஸிக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாரி கேன் தட்டிச்சென்றார்.
கால்பந்து உலகில் பேலந்தோர் விருதுக்கென்று தனியான மரியாதை இருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸின் நிறுவனம் அளிக்கிறது.
Advertisement
Advertisement
ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை 32 வயதான அலெக்ஸியா புட்டெல்லாஸ் கடந்த சீசனில் அதிகமாக கோப்பைகளை வென்றுள்ளார். மகளிர் சாம்பியன்ஸ் லீக்கையும் அவரது பார்சிலோனா அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸியா புட்டெல்லாஸ் மகளிர் நேஷனல் லீக்கில் ஸ்பெயினை வெல்லவும் உதவினார். தற்போது, மகளிர் பீரிமியர் லீக்கில் லண்டன் சிட்டி லயனசஸ் அணியில் இணைந்துள்ளார்.
முன்னதாக, பார்சிலோனாவின் மிட்ஃபீல்டர் அய்டானா பொன்மட்டி ஹாட்ரிக் பேலந்தோர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை அலெக்ஸியா புட்டெல்லாஸ் சமன்செய்துள்ளார்.
கடந்த 2021, 2022 சீசன்களில் வென்ற இவர் ஏசிஎல் தசைக்கிழிவினால் 2023,24 வரை அவரது ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்த இடைவெளியில் அய்டானா பொன்மட்டி 2023, 2024, 2025 சீசன்களில் ஹாட்ரிக் பேலந்தோர் விருதை வென்று அசத்தினார். அவருக்கு கடந்த டிசம்பரில் கால் உடைந்ததால் அவரது இடத்தை அலெக்ஸியா புட்டெல்லாஸ் சமன்செய்துள்ளதும் நினைவுகூரத்தக்கது.
Spain, barcelona star Alexia Putellas hat trick of Ballon d'Or
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.