முகப்பு
செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு சம்பளம்: கமல் ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா எதிர்ப்பு

இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மையத் தலைவா் கமல்ஹாசன் அளித்துள்ள வாக்குறுதிக்கு...

Updated On : 5 ஜனவரி 2021, 2:28 pm IST
பகிர்:

இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மையத் தலைவா் கமல்ஹாசன் அளித்துள்ள வாக்குறுதிக்குப் பிரபல நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் மக்கள் நீதி மையத் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் சமீபத்தில் தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியீட்டை ட்வீட்டை முன்வைத்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

எங்கள் அன்புக்குரியவருடன் இணைவதற்கு விலை நிர்ணயிக்காதீர்கள். எங்களுக்குச் சொந்தமானவரை தாயைப் போல கவனித்துக்கொள்வதற்குச் சம்பளம் தர வேண்டாம். எங்கள் மாளிகையான வீட்டில் அரசிகளாக இருப்பதற்கு ஊதியம் தேவையில்லை. எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள். பெண்ணிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான் எதிர்பார்க்கிறோம், ஊதியத்தை அல்ல என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.