முகப்பு
சினிமா

ஜில்லா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.16 கோடி

அந்த வகையில் ஜில்லா படத்துக்காக விஜய் சம்பளமாக ரூ.16 கோடியை பெற்றிருக்கிறார். இதன்மூலம் கோலிவுட்டில் ரஜினிகாந்தை அடுத்து அதிகம் சம்பளம் பெறும் நடிகர் பட்டியலில் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்

Updated On : 11 ஜூன் 2013, 2:50 pm IST
பகிர்:

ஜில்லா படத்தில் நடிப்பதற்காக விஜய் சம்பளமாக ரூ. 16 கோடியை பெற்றுள்ளார்.

காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் விஜய். இதில் துப்பாக்கி திரைப்படம் ரூ.100க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனிடையே விஜய் நடிப்பில் தலைவா திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் விஜய்யின் முந்தைய படமான துப்பாக்கி படத்தின் வசூலை முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு இப்போதே காணப்படுகிறது. இப்படி தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழும் விஜய்யின் சம்பளமும் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் ஜில்லா படத்துக்காக விஜய் சம்பளமாக ரூ.16 கோடியை பெற்றிருக்கிறார். இதன்மூலம் கோலிவுட்டில் ரஜினிகாந்தை அடுத்து அதிகம் சம்பளம் பெறும் நடிகர் பட்டியலில் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் ரஜினிக்கு எப்போதும் முதல் இடம்தான்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments