முகப்பு
சினிமா

குறும்பட இயக்குனரின் புதிய படம் ‘நே’

பல விஷயங்கள் இருந்தாலும் அவை எப்படி ஒரு நேர்கோட்டில் சந்திக்கின்றன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ் என்கிறார் இயக்குனர் புஸ்கின்ராஜா

Updated On : 11 ஜூன் 2013, 1:08 pm IST
பகிர்:

சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆக்ஷன்’ என்ற குறும்படத்தை இயக்கியதற்கான விருது பெற்ற புஸ்கின்ராஜா தமிழில் இயக்கி தயாரிக்கும் படம் ‘நே’.
ஒற்றை எழுத்தில் இவர் வைத்திருக்கும் படப்பெயரான ‘நே’ என்பதற்கு நேசம், நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என பல வார்த்தைகளை குறிக்கலாம் என்கிறார். இப்படி எதுவுமே இல்லாமல் வாழ்கிற 3 பேர்களைப்பற்றியதுதான் கதை. தினமும் பத்திரிகையில் படிக்கிற பாலியல் கொடுமை, சிறுவர்கள் செய்யும் தகாத செயல்கள், வயதானவர்கள் செய்கிற வக்கிரங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய கதையாக ‘நே’ படம் உருவாகிறது.
பல விஷயங்கள் இருந்தாலும் அவை எப்படி ஒரு நேர்கோட்டில் சந்திக்கின்றன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ் என்கிறார் இயக்குனர் புஸ்கின்ராஜா. வீரகுமார் ஒளிப்பதிவு செய்ய பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர் சாருநிவேதா இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். டேவிட் தெய்வநாயகம், ஹரிபாபு, ராஜேஷ்குமார் ஆகியோர் இணைதயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் சென்னையையும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் படமாக்கி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments