பவர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்
இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ‘ஜானி’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியிருக்கிறார்.
தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
1996ஆம் ஆண்டு வெளியான ‘அக்கடா அம்மாயி இக்கட அப்பாயி’ என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோவாக டோலிவுட்டில் அறிமுகமானவர் பவன் கல்யாண். தெலுங்கு நடிகரான இவர் 1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆந்திர மாநிலம் பபட்லாவில் பிறந்தார்.
இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ‘ஜானி’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியிருக்கிறார். பவன் கல்யாண்-சமந்தா நடித்த ‘அத்தரின்டிக்கி தாரெடி’ படம் இம்மாதம் ரிலீஸாகிறது. அதோடு அவர் தற்போது ‘கப்பார் சிங் 2’ படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.