முகப்பு
இந்தியா

மருத்துவ நீட் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வு முகமை வட்டாரம் தகவல்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து...

Updated On : 30 ஜூன் 2026, 8:50 am IST
கோப்புப் படம்
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை ஜூலை 20 ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் மறுதேர்வுக்கான விடைக்குறிப்புகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்சேபனைகளை தேர்வெழுதிய மாணவர்கள் அனுப்பியுள்ளனர். இதனால் குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் தேசிய தேர்வு முகமைக்கு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுதேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நாட்டில் 5,440 மையங்களிலும் நடைபெற்ற இந்த தேர்வு, முந்தைய தேர்வை விட சவாலானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஒருசில இடங்களில் மோசடியில் ஈடுபட்டதாக சில மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஜூன் 25 ஆம் தேதி நீட் மறுதேர்வுக்கான விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக ஜூன் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கட்டணமாக ஒரு கேள்விக்கு ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் இரவு 11.50 மணிக்கு மேல் பெறப்படும் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

summary

National Testing Agency gears up to declare NEET-UG 2026 retest results likely by July 20

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments