போலீஸ் வேடத்தில் பாவனா
இதனையடுத்து பாவனா போலீஸ் ஆஃபீசராக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை பத்மகுமார் இயக்குகிறார்.
‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானவர் பாவனா.
அதனைத்தொடர்ந்து இவர் கிழ்க்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேசுவரம், ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அசல் படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு, மலையளம் பக்கம் தனது பார்வையை திருப்பினார்.
தற்போது அவர் மலையாளத்தில் ஏழாமத்தெ வரவு, அங்ரி பேபிஸ், எல்லோ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து பாவனா போலீஸ் ஆஃபீசராக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை பத்மகுமார் இயக்குகிறார். இதில் பாவனாவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்க இருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.