நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரலட்சுமி நடிப்பில் தமிழில் காட்டேரி, பாம்பன், யானை என அடுத்தடுத்து படங்கள் வரவுள்ளது. இதில் யானை, இரவின் நிழல் வெளிவந்து விட்டது. இது தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிவரும் சபரி, கன்னடத்தில் லகாம், தெலுங்கில் ஹனு மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வரலட்சுமிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தன்னுடைய வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
Advertisement
Advertisement
வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டு உடைந்த குரலில் பேசியதாவது:
எல்லோருக்கும் காலை வணக்கம். ஆனால் எனக்கு நற்காலையாக இல்லை. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துக் கொள்ளவும். தனித்து இருங்கள். கோவிட் இங்கேயேதான் இருக்கிறது. எனவே முகக் கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.