மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் கல்வி வளர்ச்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்க விஜய் சேதுபதி முடிவு!
மாணவி அனிதாவின் நினைவாக அரியலூரின் கல்வி வளர்ச்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்...
மாணவி அனிதாவின் நினைவாக அரியலூரின் கல்வி வளர்ச்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, தனியார் விளம்பரத்தில் நடித்ததற்காகக் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை (கிட்டத்தட்ட ரூ. 50 லட்சம்) அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியைச் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement