தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்துள்ள சுதந்தரத்தால் ஆண்களுக்குச் சிக்கல்: இயக்குநர் ராம்
உலகமயமாக்கலினால் இன்றைய தமிழ்ப் பெண்களுக்கு நிறைய சுதந்தரம் கிடைத்துள்ளது. இதனால்...
தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது. இதையொட்டி இப்படம் குறித்த விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. விளம்பர வாசகங்கள் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ராம் கூறியதாவது:
Advertisement
Advertisement
நான் அடுக்ககத்தில் வசிக்கிறேன். அங்குக் கண்ட சம்பவங்களைக் கொண்டு தரமணி படத்தை உருவாக்கியுள்ளேன். இன்றைய இளைஞர்களிடைய நிலவும் கலாசாரம், அவர்களுடைய மனநிலை, அவர்களின் உறவு என பல அம்சங்கள் படத்தில் உள்ளன.
உலகமயமாக்கலினால் இன்றைய தமிழ்ப் பெண்களுக்கு நிறைய சுதந்தரம் கிடைத்துள்ளது. இதனால் நம் ஆண்கள் தங்களுடைய துணையைப் புரிந்துகொள்வதில் நவீனம் மற்றும் பழமையான சிந்தனைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளார்கள். தரமணி படம் தகவல் கணிப்பொறித் துறையில் பணிபுரிபவர்களைப் பற்றிய படம் மட்டுமல்ல. பன்முகக் கலாசாரம், பன்முக வாழ்க்கை கொண்ட இளைஞர்களைப் பற்றிய படம். ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையையும் தரமணி பிரதிபலிக்கும் என்றார்.
தரமணி படம் வந்தபிறகு ஆண்டிரியாவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இதுபோன்ற நடிப்புத்திறமையை நான் பார்த்ததில்லை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.