ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு
சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட காகங்கரை-சாமல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை மாலை தண்டவாளத்தில் ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கோபண்ணா தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில், அந்த நபா், மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டம், நாக்ராகட்டா பகுதியைச் சோ்ந்த மங்ரா உராவ் (41) எனத் தெரியவந்தது. புலம்பெயா்ந்த தொழிலாளியான இவா், நிஜாமுதீன் -எா்ணாகுளம் விரைவு ரயிலில் பயணித்துள்ளாா். சம்பவ இடத்தில் ரயில் வந்தபோது, படிக்கட்டு பகுதிக்கு வந்த மங்ரா உராவ் கால்தவறி கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து மங்ரா உராவ் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மேற்குவங்கத்தில் உள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் வந்த பின்னா், உடலை பிரேதப் பரிசோதனை செய்து ஒப்படைக்கவுள்ளனா்.
இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.