முகப்பு
செய்திகள்

அபார வசூலைக் குவிக்கும் ஸ்ரீதேவி மகள் நடித்த படம்:  முதல் 3 நாள்களில் ரூ. 34 கோடி!

முதல் மூன்று நாள்களில் ரூ. 34 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளன்று ரூ. 8.71 கோடியும் இரண்டாவது நாளன்று...

Updated On : 23 ஜூலை 2018, 2:07 pm IST
பகிர்:

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில், தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். 

ஜான்வி, இஷான் நடிப்பில் ஷஸாங் கைதான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தடக். மராத்திப் படமான சாய்ரத்தின் ரீமேக் இது.  இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2235, உலகளவில் 556 எனக் கிட்டத்தட்ட 2800 (2791) திரையரங்குகளில் தடக் படம் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்தப் படம் வார இறுதியில் அதாவது முதல் மூன்று நாள்களில் ரூ. 34 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளன்று ரூ. 8.71 கோடியும் இரண்டாவது நாளன்று ரூ. 11.04 கோடியும் வசூலித்த தடக், நேற்று ரூ. 13.92 கோடி வசூலித்துள்ளது. புதுமுகங்கள் நடித்த ஒரு படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 34 கோடி வசூலித்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களைப் படத்தயாரிப்பாளரான கரண் ஜோஹர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments