தொகுப்பாளர் இல்லாத ஆஸ்கர் விழா!
ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது. இதுபோன்று நிகழ்வது கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பு கடந்த 1989-ஆம் ஆண்டு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக விழா தொடங்கிய பிறகு, சுமார் 25 நிமிடங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். ஆனால், இந்த முறை விழா தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முதல் விருது வழங்கப்பட்டது.