தணிக்கைச் சான்றிதழுடன் தீபாவளிக்கு முதலில் தயாராகிவிட்ட ‘கைதி’!
இந்தப் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ்.
இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளிவருகிற நிலையில் அந்தப் படத்துக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்நிலையில் தீபாவளிக்கு வெளிவரவுள்ள இரு பெரிய படங்களில் தணிக்கைச் சான்றிதழுடன் முதலில் தயாராக உள்ளது கைதி.
Advertisement
Advertisement