'செம்பருத்தி' தொடரில் மீண்டும் பழைய ஆதி ?: வெளியான தகவல்
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி முதலில் இருந்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி முதலில் இருந்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடித்திருந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆஃபிஸ் தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரீட்சையமாகியிருந்தார்.
இந்த நிலையில் செம்பருத்தி தொடரில் நடித்ததன் மூலம் அவருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்தது. இவருக்காகவே செம்பருத்தி தொடரைப் பார்ப்பவர்கள் ஏராளம். இந்தத் தொடரில் கார்த்திக் - ஷபனா ஜோடியின் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்தத் தொடரில் இருந்து கார்த்திக் விலகினார். இந்தத் தொடரில் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதியாக அக்னி நடிக்கத் தொடங்கினார். முதலில் ஆதியாக அக்னியை ஏற்க ரசிகர்கள் தயங்கினர். இருப்பினும் அக்னி தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் பழைய ஆதியை ரசிகர்கள் பழைய ஆதியைக் காணலாம். வருகிற திங்கட்கிழமை முதல் (செப்டம்பர் 4) செம்பருத்தி சீரியல் முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடர் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.