முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பாடல்

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Updated On : 9 ஆகஸ்ட், 2022 at 10:47 AM
பகிர்:

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ பாடலை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். பாடகர் அறிவு எழுதிய அப்பாடலின் வரிகளும், நடனமும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 

’நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.