முகப்பு
செய்திகள்

விநோதய சித்தம் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணை இயக்கும் சமுத்திரக்கனி

தமிழில் வரவேற்பைப் பெற்ற விநோதய சித்தம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து சமுத்திரக்கனி இயக்கவிருக்கிறார்.   

Updated On : 24 ஜூன் 2022, 3:37 pm IST
பகிர்:

தமிழில் வரவேற்பைப் பெற்ற விநோதய சித்தம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து சமுத்திரக்கனி இயக்கவிருக்கிறார்.  

தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான படம் விநோதய சித்தம். விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து சமுத்திரக்கனி ரீமேக் செய்கிறார். 

இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன் அவரது சகோதரி மகனும் நடிகருமான சாய் தரம் தேஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை முதல் துவங்கவிருக்கிறது. 

விநோதய சித்தம் திரைப்படம் உயிரிழந்த ஒருவர் தனக்கு சில கடமைகள் இருப்பதாகக் கடவுளிடம் அனுமதிவாங்கி மீண்டும் உயிர் பெற்றுவருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் சமுத்திரக்கனி வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா வேடத்தில் சாய் தரம் தேஜும் நடிக்கவிருக்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments