'''சந்திரேலகா' தொடரிலிருந்து நான் விலகுகிறேன், காரணம்...'': முக்கிய பிரபலம் விலகல்
சந்திரலேகா தொடரிலிருந்து பிரபல நடிகர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
வாணி ராணி தொடர் மூலம் பிரபலமானவர் அருண் ராஜன். தற்போது சந்திரலேகா என்ற தொடரில் நடித்து சபரி என்ற வேடத்தில் நடித்து வந்தார். இந்தத் தொடர் 2014 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிறது.
தொடர்ந்து 8 ஆண்டுகளாக சபரி என்ற வேடத்தில் அருண் ராஜன்தான் நடித்து வருகிறார். தற்சமயம் இவருக்கு பதில் இவர் என சின்னத்திரை தொடர்களில் நடிகர்கள் மாறிக்கொண்டிருக்க 8 ஆண்டுகளாக ஒரே தொடரில் நடித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | கன்னத்தில் அறை வாங்கிய படத்தை பகிர்ந்த குஷ்பு: என்ன நடந்தது ?: ''வன்முறை வேண்டாம்....''
Advertisement
Advertisement
இந்த நிலையில் அவர் சந்திரலேகா தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சந்திரலேகா தொடரில் இனி தொடரப்போவதில்லை.
எனது தனிப்பட்ட பணிகள் காரணமாக என்னால் சந்திரலேகா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அஸ்வின் குமார் எனது வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளியுங்கள் என தெரிவித்துள்ளார்.
அருண் ராஜனுக்கு பதிலாக சந்திரலேகா தொடரில் நடிக்கவிருக்கும் அஸ்வின் குமார், தற்போது சித்தி 2 தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.