குலதெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சாமி தரிசனம்
தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேல வழுத்தூர் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோயில் விக்னேஷ்சிவன் குலதெய்வ கோயிலாகும். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
தங்கள் கிராமத்திற்கு நயன்தாரா வந்துள்ள செய்தி அங்கு பரவியதையடுத்து, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.