வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் பற்றிய தகவல்கள்..
ஐடிஆர்-1, ஐடிஆர்-2 படிவம் மூலம் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்பவர்களுக்குத்தான் 2026ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
எனவே, அனைவருக்குமே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இதே ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாள் என்று கருதக் கூடாது. ஐடிஆர் - 3, ஐடிஆர்-4 ஆகிய படிவங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
அது மட்டுமல்லாமல், வருமான வரிக் கணக்குச் சட்டப்படி, இந்த கால அவகாசத்தைத் தவறவிடுபவர்கள் தாமதத்துக்கான அபராதம் மற்றும் வரிக்கான வட்டியைச் சேர்த்து தாமத வரிக் கணக்கையும் தாக்கல் செய்யலாம். அதற்கு கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி.
Advertisement
Advertisement
2025-26 நிதியாண்டுக்கான பல்வேறு வகையான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கலை (ITR) மேற்கொள்வதற்கான காலக்கெடு பின்வருமாறு அமைகிறது.
ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) - சம்பளம் மற்றும் முதலீட்டாளர்கள் : 31 ஜூலை 2026
ஐடிஆர்-3 (ITR-3) மற்றும் ஐடிஆர்-4 (ITR-4) - வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் - தணிக்கை தேவைப்படாதவர்கள்: 31 ஆகஸ்ட் 2026 (புதிதாக திருத்தப்பட்டது)
ஐடிஆர்-3 (ITR-3) மற்றும் ஐடிஆர்-4 (ITR-4) - வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் - தணிக்கை தேவைப்படுபவர்கள் : 31 அக்டோபர் 2026
தொழிலில், சர்வதேச பரிமாற்றம், உள்நாட்டுப் பரிமாற்றங்களில் விலை நிர்ணய அறிக்கை (transfer pricing reports) தேவைப்படும் வணிகங்கள் : 30 நவம்பர் 2026
கால அவகாசம் நிறைவடைந்த பிறகு (தாமதமான) தாக்கல்: 31 டிசம்பர் 2026
திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கல்: 31 மார்ச் 2027
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கல் ஐடிஆர்-யு (ITR-U): 31 மார்ச் 2031 (சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டு முடிவிலிருந்து 4 ஆண்டுகளுக்குள்)
தேவைப்பட்டால், அவசியம் இருந்தால் வருமான வரித் துறையால் காலக்கெடு நீட்டிக்கப்படும். அவ்வாறு நீட்டிக்கப்படாத பட்சத்தில், இந்தக் காலக்கெடுவே பொதுவானது.
வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கு அபராதத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு மொத்த வருவாய் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் அபராதத் தொகை ரூ.1000
ஆண்டு மொத்த வருவாய் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000
When is the last date to file the income tax return?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.