முகப்பு
செய்திகள்

ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தின் தலைப்பு ‘அதிகாரி’?

இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம்சரண் இணையும் புதிய படத்தின் தலைப்பு 'அதிகாரி' என தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 மே 2022, 12:10 pm IST
பகிர்:

இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம்சரண் இணையும் புதிய படத்தின் தலைப்பு 'அதிகாரி' என தகவல் வெளியாகியுள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். ‘ஆர்சி15’ என்ற தலைப்பில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது படத்தின் தலைப்பு ‘அதிகாரி’ என்ற தகவல்கள் இணயத்தில் உலாவி வருகின்றன. ஆனால்  இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் ஆபிசர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement

‘பேட்ட’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ மாபெரும் வசூல் சாதனைப் படைத்தது. ஆனால் ‘ஆச்சார்யா’ படம் தோல்வியை தழுவியதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.