முகப்பு
செய்திகள்

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? 50-வது நாளில் பிக் பாஸ்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி 50-வது நாளை எட்டியுள்ளது.

Updated On : 28 நவம்பர் 2022, 3:06 pm IST
பகிர்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி 50-வது நாளை எட்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 7 வாரங்களை கடந்துள்ள நிலையில், சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட் ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

Advertisement

Advertisement

தற்போது 50-வது நாளில் 14 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அதிகபட்சம் இருவர் வர வாய்ப்புள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ரச்சிதா, குயின்ஸி ஆகியோர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், வரும் வாரங்களில் இவர்களுக்கான வாய்ப்பு குறைவு என்றே தெரிகின்றது.

அதேபோல், ராம், கதிரவன் ஆரம்பத்தில் போட்டியில் ஈடுபாடு காட்டாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகதான் அவர்களது முகம் வெளியே வரத் தொடங்கியுள்ளது.

போட்டியாளர்களுக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னையை வைத்து நமினேட் செய்யப்படும் காரணத்தினால் ஜனனியும், ஆயிஷாவும் தப்பித்து வருகிறார்கள் என்றே கூறலாம்.

பிரபல போட்டியாளர்களான மைனா நாந்தினி, ஏடிகே, அமுதவாணன் ஆகியோரின் பங்கேற்பு சிறிது குறைவாக காணப்பட்டாலும், இதுவரை நானினேசனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கூடுதல் ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற கருத்தே ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

மக்கள் பிரதிநிதியாக இந்தாண்டு முதல்முறையாக கலந்து கொண்டுள்ள தனலட்சுமி, அடிக்கடி கோபப்பட்டு ‘என்னை வெளியே விடுங்கள்’ என்று புலம்பினாலும், சமீபகாலமாக விளையாட்டில் கவனம் செலுத்துவதால், இந்த வாரம் முதல் ஆளாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

இறுதியாக, விக்ரமன், சிவின், அஷிம் ஆகியோர் பிக் பாஸ் ரசிகர்களின் சுவாரஸியத்தை பூர்த்தி செய்யும் போட்டியாளராக திகழ்கின்றனர். இவர்களில் மூவரில் யார் நாமினேசனுக்கு சென்றாலும் முதல் ஆளாக காப்பாற்றப்படுகிறார்கள். முதல் மூன்று இடங்கள் இவர்களுக்குதான் என்ற கருத்து சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மீதமுள்ள 8 வாரங்களில் யார் இறுதிவரை தாக்குபிடித்து வெற்றி பெறுவார்கள்? யார் அடுத்தடுத்து வெளியேறுவார்கள்? என்று பொறுத்திருந்து பார்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments