வைரலாகும் ஹன்சிகா புகைப்படங்கள்!
நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இன்று அவர் நடிப்பில் உருவான ‘பார்ட்னர்’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா, தொழிலதிபர் சோகேல் என்பவரை ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
Advertisement
Advertisement
இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.