செய்திகள்

பொன்னியின் செல்வன் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படங்கள்! 

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது.  

பொன்னியின் செல்வனில் வானதியாக சோபிதா துலிபாலா நடித்திருந்தார். தனது அழகினால் ரசிகர்களின் கவனத்தினையும் பெற்றார் சோபிதா. 

ஹிந்தியில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.0 படத்தில் அறிமுகமானவர். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது ஆங்கிலப்படமான மங்கி மேன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் ஹெவன்’ தொடர் அமேசான் பிரைமில் ஆக.10ஆம் நாள் வெளியாக உள்ளது. 

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அவர் பதிவிட்ட புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகை தமன்னா இந்தப் புகைப்படங்களுக்கு தீ எமோஜிக்களை கமெண்ட்டாக பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் திருமணம்!

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT