முகப்பு
செய்திகள்

மீண்டும் சீரியலில் நுழையும் பாவனி: பிரபல தொடரின் 2-ஆம் பாகமா?

மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக நடிகை பாவனி தெரிவித்துள்ளார்.

Updated On : 10 அக்டோபர் 2023, 2:42 pm IST
பகிர்:

மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக நடிகை பாவனி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பாவனி, மீண்டும் புதிய சீரியல் ஒன்றில்  நடிக்கவுள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர், நடிகை ரெட்டை வால் குருவி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான அமீருடன் காதல் ஏற்பட்டதால், அமீரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் பாவனி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த தொடரிலும் நடிக்காத பாவனி, தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பாவனி நடிக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்று அவர் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments