ஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தாக லியோ வெளியாக உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு - 2’ திரைப்படம் சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.