மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியானது!
பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் நடைபெற்று வந்த நிலையில், விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க: கடும் உடற்பயிற்சியில் ராஷ்மிகா!
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சமூகவலைதளத்தில் மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.