நானியின் சூர்யாவின் சனிக்கிழமை: முதல்நாள் வசூல் விவரம்!
நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களை பெற்றன.
தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் நேற்று (ஆக.29) வெளியாகியது.
Advertisement
Advertisement
இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலக முழுவதும் முதல்நாளில் ரூ.24.11 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
நானியின் தசரா படத்தின் வசூலினை (ரூ.38 கோடி) இந்தப் படம் முறியடிக்க தவறியிருந்தாலும் அடுத்தடுத்த நாள்களில் படத்தின் வரவேற்பு அதிகரிக்கும் என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.