நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நயன்தாரா?
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகத் தகவல்.
குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். குறைந்த பட்ஜெட்டில் உருவான அப்படம், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன் நல்ல படம் என்கிற பெயரையும் ஈட்டியது.
பின், 7 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளது.
Advertisement
Advertisement
இரண்டே படங்களில் பெரிய உச்சத்திற்கு சென்ற நித்திலன், அடுத்ததாக யாரை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையை நித்திலன் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.