ஞானவேல் இயக்கத்தில் சூர்யா... மீண்டும் ஒரு உண்மைச் சம்பவம்?
நடிகர் சூர்யாவின் 48-வது படம் குறித்து...
நடிகர் சூர்யா மீண்டும் ஜெம் பீம் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்கியிருந்தால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா - 47 திரைப்படமும் திரைக்கு வரவுள்ளதால் இந்தாண்டே சூர்யா 3 வெளியீடுகளைக் காணவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சூர்யா - 48 திரைப்படத்தை இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கவுள்ளதாகவும் ஜெய் பீம் திரைப்படத்தைப் போல் இதுவும் உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெய் பீம் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் திரையரங்க வெற்றி கிடைக்கவில்லை. இப்படம் திரையரங்குகளுக்காக எடுக்கப்படும் என்றே தெரிகிறது.
Reports suggest that actor Suriya is set to act once again under the direction of the filmmaker behind the movie Jai Bhim
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.