ரூ. 100 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா?
நடிகர் சூர்யாவின் சம்பளம் குறித்து...
நடிகர் சூர்யா தன் சம்பளத்தை ரூ. 100 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்கியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா - 47 திரைப்படமும் திரைக்கு வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் த. செ. ஞானவேலுடன் சூர்யா தன் 48-வது படத்தில் நடிக்கிறா. இதனை ஹொம்பாலே மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் சூர்யா தன் சம்பளத்தை ரூ. 100 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித் ஆகியோர் எப்போதோ ரூ. 100 கோடி சம்பளத்தை அடைந்துவிட்டனர். ஆனால், சினிமாவில் மார்க்கெட் முக்கியம் என்பதால் சூர்யா அந்த இடத்தை அடையாமல் இருந்தார்.
தற்போது, கருப்பு திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 170 கோடிக்கும் மேல் வசூலித்து சூர்யாவின் வணிகத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், தன் சம்பளத்தையும் சூர்யா உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் சொந்தத் தயாரிப்பிலேயே சூர்யா நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Reports indicate that actor Suriya has raised his remuneration to ₹100 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.