பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

அதிர்வுகளைக் கிளப்பிய சட்லஜ் திரைப்படம் ஓடிடியிலிருந்து நீக்கம்!

சட்லஜ் திரைப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது...

Published On :7 ஜூலை 2026, 4:33 pm IST

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சட்லஜ் திரைப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் செயல்பட்ட மனித உரிமைகள் போராளியான ஜஸ்வந்த் சிங்கின் உண்மைக் கதையாக உருவான சட்லஜ் திரைப்படம் 1985 - 1995 வரை பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் படுகொலை செய்ததாகக் கூறுகிறது. அதிகார அமைப்பின் இந்தக் கொடூரங்களை வெளியுலகுக்குக் கொண்டு வர போராடிய மனித உரிமைகள் போராளியான ஜஸ்வந்த் சிங் இறுதியில் என்ன ஆனார்? என்கிற கோணத்தில் செல்லும் இத்திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட அரசு அனுமதிக்கவில்லை.

திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்றால் 120 இடங்களை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியதால் நேரடியாகவே 2 நாள்களுக்கு முன் ஜீ 5 ஓடிடியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஓடிடி வெளியீட்டில் இப்படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்ததால் பெரிய விவாதம் உருவானது. இதன் காரணமாக, உடனே அப்படம் ஓடிடியிலிருந்து ( இந்தியாவில் மட்டும்) நீக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கு எப்போதும் செவி சாய்க்க வேண்டிய அரசு, அதனை மீறுபவர்களைக் குறித்து திரைப்படம் எடுத்தால் தடை செய்கிறது என பலரும் தங்களின் ஆதங்கங்களைக் கூறி வருகின்றனர்.

The movie Sutluj, based on a true story, has been removed from OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.