கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா திரைப்படத்தின் மூலம் நடிகர் கவின் பிரபலமடைந்தார். பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் நடித்திருந்தார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
தற்போது இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் கவின் ஆண்ட்ரியாவுடன் நடிக்க உள்ளார்.
Advertisement
Advertisement
நகைச்சுவை நடிகர் பால சரவணன் இதில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி. இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் விக்ரமன் அசோக் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு மாஸ்க் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் தயாரிப்பிலும் கவின் நடிக்க ஒப்பந்தமாயிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.