முகப்பு
செய்திகள்

அரண்மனை - 5 பணிகளில் சுந்தர். சி?

அரண்மனை - 5 அப்டேட்...

Updated On : 19 அக்டோபர் 2024, 5:23 pm IST
இயக்குநர் சுந்தர். சி
பகிர்:

அரண்மனை படத்தின் 5 பாகப் பணிகளில் இயக்குநர் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

முதல் மூன்று பாகங்களுக்குக் கிடைத்ததைவிட அதிக வரவேற்பு இப்படத்திற்குக் கிடைத்ததால், அடுத்ததாக இதன் 5 ஆம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர். சி இருப்பதாகத் தகவல் வெளியானது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, மூக்குத்தி அம்மன் - 2 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரண்மனை - 5 படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் துவங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தை அடுத்தாண்டு கோடை வெளியீடாகக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.