ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2! புதிய பாடல் வெளியீடு!
மீசையமுறுக்கு 2 படத்தின் கோயிந்தம்மா பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நாயகனாக நடிக்கும் மீசையமுறுக்கு 2 திரைப்படத்தின் “கோயிந்தம்மா” பாடல் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் “மீசையமுறுக்கு”. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஹிப்ஹாப் ஆதியின் “மீசையமுறுக்கு 2” படத்தில் கேத்திகா ஷர்மா நாயகியாகவும், யூடியூபர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, இப்படத்தின் ஆரா 10/10, பப்பாளி பழமே ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், “மீசையமுறுக்கு 2” படத்தின் "கோயிந்தம்மா” எனும் மற்றொரு புதிய பாடல் இன்று (மே 21) மாலை வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை, பாடகர்கள் கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் ஆகியோர் பாடியுள்ளனர்.
The song "Goyindamma" from Hip Hop Adhi's film *Meesaya Murukku 2* has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.