நடிகை ஸ்ரீலீலா...  படங்கள்: இன்ஸ்டா / ஸ்ரீலீலா.
செய்திகள்

ஏஐ மூலம் ஆபாச புகைப்படங்கள்... ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்ரீலீலா!

பராசக்தி பட நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

சக நடிகைகளும் தன்னைப் போலவே இதில் பாதிக்கப்படுவதால் அவர்களின் சார்பாகவும் இதைப் பதிவிடுவதாகக் கூறியுள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி படத்தில் அறிமுகமாகுகிறார்.

இந்தப்படம் வரும் ஜனவரி பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்பம் என்பதே வாழ்க்கையை எளிமையாக்கவே, கடினமாக்க அல்ல...

சமீபத்தில் இவரது ஆபாச புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவின. இது குறித்து ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் அனைவரிடமும் ஏஐ மூலமாக உருவாக்கப்படும் கண்றாவிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பதற்கும் சீரழிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதே வாழ்க்கையை எளிமையாக்கவே, கடினமாக்க அல்ல என்பது எனது கருத்து.

அனைத்து பெண்களுக்குமே பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும்...

அனைத்து பெண்களுமே ஒருவருக்கு மகளாகவோ, பேத்தியாகவே, சகோதரியாகவோ, தோழியாகவோ, உடன் வேலை செய்பவர்களாகவோ இருக்கிறார்கள். கலைத்துறையில் இருந்தாலுமே அந்தப் பெண்ணுக்கு பாதுக்காப்பான சூழலை தரவேண்டும்.

எனது பிஸியான வேலை நெருக்கடியினால் சமூக வலைதளங்களில் நடைபெறுவதை கவனிக்க முடியவில்லை. எனது நலம்விரும்பிகள் இதைக் கவனித்தில் கொண்டுவந்தார்கள்.

நான் எப்போதுமே எனது உலகில் வாழ்கிறேன். ஆனால், இது மிகவும் வருத்தமளிக்கிறது, தொந்தரவு தருகிறது. என்னைப் போலவே எனது சக நடிகைகளும் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.

எனது ரசிகர்கள் மீதான அன்பினால் எங்களுக்கு ஆதரவாக இருப்பீர்களென கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

Popular Telugu actress Sreeleela has posted on her Instagram page, expressing her deep distress about her photos being misrepresented.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர்!

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

”அருவருக்கத்தக்க பொய் பிரசாரத்தை திமுக செய்துவருகிறது!” TVK அருண்ராஜ்

அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT