முகப்பு
செய்திகள்

கைவிடப்படும் மார்கோ - 2!

மார்கோ - 2 திரைப்படம் கைவிடப்படுவதாக உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்...

Updated On : 15 ஜூன் 2025, 11:03 am IST
உன்னி முகுந்தன்
பகிர்:

உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாக இருந்த மார்கோ இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக அறிவிப்பு.

இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடித்த மார்கோ திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 20 தேதி வெளியானது.

அதிக வன்முறைக் காட்சிகள் கொண்ட ஆக்சன் படமான இது கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

Advertisement

Advertisement

இதன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப் பணிகள் நடைபெற்றன. ஆனால், இன்னொரு பக்கம் இப்படியான வன்முறைப்படங்கள் மனநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உன்னி முகுந்தன் இதுபோன்ற கதைகளைத் தேர்வுசெய்யக்கூடாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், மார்கோ - 2 குறித்து கேட்ட ரசிகர் ஒருவரிடம் உன்னி முகுந்தன், “சகோதரரே மன்னித்துவிடுங்கள். மார்கோ தொடரை முன்னே கொண்டு செல்வதற்கான திட்டத்தைக் கைவிடுகிறேன். காரணம், அப்படத்தைச் சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்களே இருக்கின்றன. நான் அப்படத்தைவிட சிறந்த படத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மார்மோ விமர்சனங்களைச் சந்தித்தாலும் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்குக் காத்திருந்த ரசிகர்களிடம் இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments