என்டிஆர் - நீல் பட வெளியீடு ஓராண்டு தள்ளிப் போகிறது!
இயக்குநர் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர். இணையும் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர். இணையும் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப்., சலார் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் 2-ம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உடன் இணைந்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
பிரசாந்த் நீலின் முந்தைய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
முன்னதாக ஜூன் 25, 2026 அன்று இப்படம் ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டை ஓராண்டு தள்ளிவைத்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பான் இந்திய மொழிகளில் உருவாகும் இப்படம் ஜூன் 11, 2027 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
படத்தின் அறிமுக க்ளிம்ப்ஸ் விடியோ வருகிற மே 20 அன்று வெளியாகவுள்ளது.
NTR-Neel Film Release Postponed by One Year
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.